பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் பேச்சு


பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் பேச்சு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 7:08 PM GMT)

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது. இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அகரமுதலி திட்ட இயக்குனர் செழியன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என தமிழ் அறிஞர்்களும், தலைவர்களும், பல போராட்டங்ளை நடத்தி 1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. அதிக அளவில் மக்களுக்கும், அரசிற்கும் இடையே நிர்வாக நடைமுறைகள் ஒளிவுமறைவின்றி நடைபெறவும், பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையொப்பம் இட வேண்டும் என 1978-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே அரசு துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பணியாளர்கள், தமிழிலில் மட்டுமே கை யொப்பம் இட வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவலர்கள் கோப்புகளை பராமரிக்கும் போது தவறு இல்லாமல் அலுவலக குறிப்பு கடித போக்குவரத்து பதிவேடுகள், சிறப்பாக கையாண்டு புதிதாக உள்ள சொற்களை தமிழில் சிறப்பாக எழுதி கோப்புகளை கையாள வேண்டும். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும், பயன்பாட்டை பொருத்தே அமையும் என்பதால் எங்கும், எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அலுவலக கோப்புகளை தமிழில் சிறப்பாக கையாண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கருக்கு கலெக்டர் பிரபாகர் கேடயம் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கீதா, உதவி பேராசிரியர் தனலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story