மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstrate requests Farmers demonstrated

கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடவாசல்,

கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாகவும், வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளிகளுக்கு உடனடியாக 100 நாள் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஆனந்தன், தலைவர் சிவசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் துரைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரஹாசன், தலைவர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குடவாசல் ஒன்றிய செயலாளர்கள் லெட்சுமி (தெற்கு), அன்பழகன் (வடக்கு), மாவட்டக்குழு உறுப்பினர் கெரக்கொரியா உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக ஒகை ஆற்றுப்பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் படி தாசில்தார் அலுவலகத்தில்,அவர்கள் மனுவை அளித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு பெட்டியில் போட்ட விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு போடும் பெட்டியில் விவசாயிகள் போட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2. ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேர் கைது கோபியில் பரபரப்பு
கோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. துரைப்பாக்கத்தில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
துரைப்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.