மாவட்ட செய்திகள்

வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை + "||" + In different places 3 suicides including woman

வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில்
பெண் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 54). விவசாயி. இவரது மனைவி சைலஜா(40). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் அருகே பேரிகையை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி உமா மகேஸ்வரி(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக உமா மகேஸ்வரி, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உமாமகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி அருகே பீரேபாளையத்தை சேர்ந்தவர் சங்கரன்(39). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முனியம்மா(30). கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சங்கரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோபி அருகே தொழில் அதிபர் மனைவி தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
கோபி அருகே தொழில் அதிபர் மனைவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
2. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை
கோவையில், 2 மகள்களை கொன்று தப்பிய தந்தை ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்த போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
3. சேலத்தில் பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை
சேலத்தில் பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. மகள் காதல் திருமணம் செய்ததால் வி‌ஷம் குடித்து தந்தை தற்கொலை
மொடக்குறிச்சி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் வி‌ஷம் குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
5. உத்தனப்பள்ளி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உத்தனப்பள்ளி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை