கோவில்பட்டி அருகே கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை பயிர் காப்பீடு பிரிமீயத்தொகை வாங்க மறுத்ததற்கு எதிர்ப்பு
கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு பிரிமீயத்தொகை வாங்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு பிரிமீயத்தொகை வாங்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
விவசாயிகள் முற்றுகை
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் வெங்கடாசலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் பயிர் காப்பீடு பிரிமீயத்தொகை வாங்க மறுத்ததாகவும், மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.550 செலுத்தி சேமிப்பு கணக்கு தொடங்கிய பின்னர், அதன் மூலம் பயிர் காப்பீடு பிரீமியத்தொகை செலுத்துமாறும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளையரசனேந்தலில் உள்ள வெங்கடாசலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் நேற்று காலையில் முற்றுகையிட்டனர். பாரதீய கிசான் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, துணை தலைவர் பரமேசுவரன், கிளை தலைவர் பசுபதி, ஒன்றிய துணை தலைவர் செல்லப்பாண்டியன், இருளப்பன், இருளாண்டி, சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
முற்றுகையிட்டவர்களிடம், கூட்டுறவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் செலுத்தாமலேயே சேமிப்பு கணக்கு தொடங்கி, அதன் மூலம் பயிர் காப்பீடு பிரிமீயத்தொகை செலுத்தலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story