மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்துப்பாக்கிகள், வாகனங்களை ஐ.ஜி. ஆய்வு + "||" + At the district firearms stadium Guns and vehicles IG Review

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்துப்பாக்கிகள், வாகனங்களை ஐ.ஜி. ஆய்வு

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்துப்பாக்கிகள், வாகனங்களை ஐ.ஜி. ஆய்வு
சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை ஐ.ஜி. பெரியய்யா ஆய்வு செய்தார்.
சேலம், 

சேலம் மாவட்ட போலீசில் வருடாந்திர ஆய்வு நடத்துவதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா நேற்று காலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தார். பின்னர் அவர் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதையடுத்து ஐ.ஜி. பெரியய்யா போலீசாரின் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தார்.

அப்போது அதில் உள்ள சிறிய குறைபாடுகளை சரிசெய்யுமாறு போலீசாரை அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை பயன்பாட்டில் உள்ள அனைத்து ஜீப், கார், வேன், வஜ்ரா வாகனம், இருசக்கர வாகனங்கள் ஆகியவை சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதை பரிசோதனை செய்து காண்பிக்குமாறு கூறி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு முடிந்தவுடன் அவர், மாவட்ட மோப்பநாய் பிரிவுக்கு சென்று மேகா, ரோமியோ, லில்லி, ஜெனி ஆகிய 4 மோப்பநாய்களையும் சரியான முறையில் கவனித்து வருகிறார்களா? என பார்வையிட்டார். மேலும் அவர், ஆயுதக்கிடங்குகளில் ஆய்வு நடத்தி அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

இதையடுத்து ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளையும், மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் உடன் இருந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை