மாவட்ட செய்திகள்

சேலத்தில்பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை + "||" + In Salem Paratro master fire and suicide

சேலத்தில்பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை

சேலத்தில்பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை
சேலத்தில் பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம், 

சேலம் சாமிநாதபுரம் வண்டிபேட்டை தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 56). இவர் 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பாலகிருஷ்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடலில் புண் ஏற்பட்டு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்றார்.

இருந்தாலும் வயிற்றுவலி முழுமையாக குணமாகவில்லை என்பதால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது, பாலகிருஷ்ணன் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். வலியால் அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் பாலகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் தான் தீக்குளித்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது குறித்து உறவினர்கள் யாரும் போலீ சாரிடம் தெரிவிக்கவில்லை‘ என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. செங்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
செங்குன்றம் அருகே, பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
3. போலீஸ் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி
காதலனுடன் சேர்த்து வைக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்?
மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை