18 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களிடம் தொகுதி தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்


18 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களிடம் தொகுதி தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 8:24 PM GMT)

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் நேற்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மதுரை,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் நேற்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக செலவிடப்படும். எனவே 2016–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது மேற்கண்ட 18 தொகுதிகளுக்கு செலவிடப்பட்ட தொகையை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் வசூலிக்க வேண்டும். அந்த தொகையை கஜா புயல் பாதித்த பகுதிகளில் செலவிட உத்தரவிட வேண்டும். அதுவரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story