அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் திறந்த வெளியில் தயாராகும் சத்துணவு


அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் திறந்த வெளியில் தயாராகும் சத்துணவு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:15 PM GMT (Updated: 7 Dec 2018 9:42 PM GMT)

அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் சத்துணவு கூடம் இல்லாததால் திறந்தவெளியில் சமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அன்னவாசல், 

அன்னவாசல் அருகே குடுமியான்மலையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் சாலையில் குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குடுமியான்மலையை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளியில் மதியம் வழங்கப்படும் சத்துணவை சாப்பிடுகின்றனர்.

பள்ளிக்கு சத்துணவு கூடம் இல்லாததால், பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சுகாதாரமற்ற இடத்தில் கற்களை கொண்டு அடுப்பு அமைக்கப்பட்டு, சமையல் செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், வெட்ட வெளியில் மண் தரையில் சமைப்பதால் சாதம், குழம்பு போன்றவற்றில் காற்றில் பறந்து வரும் தூசுகள் விழுகின்றன.

இந்த பள்ளி அருகே உள்ள சாலை வழியாகத்தான் ஏராளமான லாரிகளில் செங்கல், மணல், போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும்போது லாரிகளில் இருந்து செங்கல் தூசுகளும், மணலும் பறந்து உணவு பொருட்களில் விழுகின்றன. இதன் காரணமாக சுகாதாரமற்ற முறையிலேயே மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. எனவே இந்த பள்ளிக்கு சத்துணவு கூடம் கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story