மாவட்ட செய்திகள்

குறை பிரசவத்தில் பிறந்தகுழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசிய இளம்பெண்பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் + "||" + Born in a short supply The teenager thrown into the toilet sheet

குறை பிரசவத்தில் பிறந்தகுழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசிய இளம்பெண்பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

குறை பிரசவத்தில் பிறந்தகுழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசிய இளம்பெண்பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசிய இளம்பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை, 

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசிய இளம்பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

ரத்தக்கறையுடன் ஓடிய இளம்பெண்

மும்பை அம்போலி பகுதியில் உள்ள பொது கழிவறைக்குள் இருந்து சம்பவத்தன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் ரத்தக்கறையுடன் ஓட்டம் பிடித்தார். இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த இளம்பெண்ணை விரட்டி பிடித்து அம்போலி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சுவர்ணா (வயது19) என்பதும், ரத்னகிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் திருமணமாகாத இவர் கர்ப்பமாக இருந்து உள்ளார். சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பு அவர் அந்தேரி மேற்கு மடார்பாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை

இரவில் யாரிடமும் சொல்லி கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இந்தநிலையில், தான் சம்பவத்தன்று அதிகாலை அம்போலி பொது கழிவறையில் அவருக்கு குறைபிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது. இது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக குழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசி தண்ணீர் ஊற்றிவிட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, கழிவறையில் இருந்தவர்கள் அவர் ரத்தக்கறையுடன் இருந்ததை பார்த்து கேட்டு உள்ளனர். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தபோது, பொதுமக்களிடம் பிடிபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சுவர்ணாவை கைது செய்தனர். கழிவறை கோப்பையில் கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுவர்ணாவின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை