பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கைவரிசை
பரேலில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கைவரிசை செய்தது தெரியவந்தது.
மும்பை,
பரேலில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கைவரிசை செய்தது தெரியவந்தது.
தங்கச்சங்கிலி பறிப்பு
மும்பை பரேல் பகுதியில் சம்பவத்தன்று ரேஷ்மா சக்பால்(வயது60) என்ற ெபண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் சிலர் நகை பறித்துச்சென்ற வாலிபர்களை விரட்டிச்சென்றனர்.
இதில், வாலிபர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து, போய்வாடா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணை
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களது பெயர் முகமது அவர்சர் சையது இரானி(26) மற்றும் ஆஷிஸ் ஹபிஸ் சையது இரானி (38) என்பது தெரியவந்தது. மேலும் கைதான 2 பேரும் ஏற்கனவே தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் 18 மாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story