மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது + "||" + Tiruvadiyar festival in Nellaiyappar temple On the 14th begins with the flag

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை, 

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நெல்லையப்பர் கோவில்

பாண்டியர் கால சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலாகும். இந்த கோவிலில் சித்திரை வருடபிறப்பு, வைகாசி விசாகம், ஆனித்தேரோட்டம், பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா, ஆடிப்பூர வளைகாப்பு வைபவம், ஐப்பசி திருகல்யாணம் என வருடத்தில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா சிறப்பு பெற்றதாகும். சிவ பெருமான் நடனமாடிய 5 சபைகளில் நெல்லையப்பர் கோவில் தாமிரசபையாகும்.

திருவாதிரை திருவிழா

நெல்லையப்பர் கோவில் தாமிரசபையில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற திருவாதிரை திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழா நாட்களில் பெரியசபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான 17-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்மாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடக்கிறது.

ஆருத்ரா தரிசனம்

9-ம் திருவிழாவான 22-ந் தேதி இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 23-ந் தேதி அதிகாலை 3-30 மணிக்கு தாமிரசபை முன்பு உள்ள கூத்தபிரான் சன்னதி முன்பு பசு தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.