தென்மாவட்டங்களுக்கு வினியோகிக்க 3,600 டன் ரேஷன் அரிசி நெல்லை வந்தது
தென்மாவட்டங்களுக்கு வினியோகிக்க வெளிமாநிலங்களில் இருந்து 3,600 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தது.
நெல்லை,
தென்மாவட்டங்களுக்கு வினியோகிக்க வெளிமாநிலங்களில் இருந்து 3,600 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தது.
ரேஷன் அரிசி
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்காக ஆந்திரா, கர்நாடகம், மத்தியபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருட்கள் வாணிப கழகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வினியோகம் செய்கிறது.
இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து இந்த ஆண்டில் ஏற்கனவே 2 கட்டமாக அரிசி வாங்கி வினியோகம் செய்து உள்ளது.
3 ஆயிரத்து 600 டன்
இந்த நிலையில் 3-வது கட்டமாக 3 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அரிசி மூட்டைகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள குடோனில் இறக்கி வைக்கப்பட்டன.
பின்னர் அங்கிருந்து அரிசி மூட்டைகள் நேற்று காலையில் லாரிகள் மூலம் நெல்லை சந்திப்பு, தாழையூத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருட்கள் வாணிப கழகத்தின் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story