மாவட்ட செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,300 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது + "||" + The National People's Court has settled 1,300 cases

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,300 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,300 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது
புதுச்சேரியில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி,

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான மதன் பீமாராவ் லோகூர் உத்தரவின் படி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான மணிக்குமார் வழிகாட்டுதலின் படி புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புதுச்சேரி முதன்மை சார்பு நீதிபதி எழிலரசி, மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, குற்றவியல் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் 9 அமர்வுகளும், காரைக்காலில் 2 அமர்வுகளும், மாகி மற்றும் ஏனாமில் தலா ஒரு அமர்வும் நடந்தது. இதில் சமாதானம் செய்யக்கூடிய கிரிமினல், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன்–மனைவி பிரச்சினை, குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்சம், உரிமையியல், சிவில், தொழிலாளர் பிரச்சினை, வங்கி கடன் என மொத்தம் 6,124 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 1,306 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 75லட்சத்து 57 ஆயிரத்து 890 இழப்பீடாக வழங்கப்பட்டது. நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு வழக்கில் தீர்வு பெற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. வங்கி கடன் மோசடி வழக்கு: அரசு ஒப்பந்ததாரருக்கு 5 ஆண்டு சிறை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
வங்கி கடன் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3. விபத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான வழக்கு: தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
4. மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்கு; தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் கைது
மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக சந்தேகத்தின் பேரில் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5. வெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைப்பு; 4 விவசாயிகள் மீது வழக்கு
வெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.