மைசூரு மாவட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய புலி, கரடி மீட்பு சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்டன


மைசூரு மாவட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய புலி, கரடி மீட்பு சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்டன
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 8:59 PM GMT)

மைசூரு மாவட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய புலி, கரடி மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவைகள் வனப்பகுதியில் விடப்பட்டன.

மைசூரு, 

மைசூரு மாவட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய புலி, கரடி மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவைகள் வனப்பகுதியில் விடப்பட்டன.

சுருக்கு கம்பியில் சிக்கிய ஆண் புலி

மைசூரு மாவட்டத்தில் நாகரஒலே தேசிய வனச்சரணாலயம் உள்ளது. இந்த நிலையில் எச்.டி.கோட்டை தாலுகா முத்தனஹள்ளி அருகே சாபரஹள்ளி வனப்பகுதியில் நேற்று முன்தினம் 3 வயதான ஆண் புலி ஒன்று வேட்டைக்காரர்கள் அமைத்திருந்த சுருக்கு கம்பியில் சிக்கி கழுத்தில் காயத்துடன் உயிருக்கு போராடியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகரஒலே தேசிய வனச்சரணாலய உதவி வனப்பாதுகாவலர் சோமப்பா, நாகரஒலே வனச்சரக அதிகாரி பிரசன்னகுமார், கால்நடை மருத்துவர் முஜிப் அகமது மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுருக்கு கம்பியில் சிக்கி காயமடைந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த புலியை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த புலி நேற்று காலை நாகரஒலே வனப்பகுதியில் விடப்பட்டது.

கரடிக்கும் சிகிச்சை

அதுபோல் மைசூரு மாவட்டம் சரகூரு அருகே நுகு அணையை ஒட்டி உள்ள ஒசபீருவாலு கிராமத்தையொட்டி வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டைக்காக அமைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பி வேலியில் ஒரு கரடி சிக்கி உயிருக்கு போராடியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயக்க ஊசி செலுத்தி கரடியை மீட்டனர்.

பின்னர் அந்த கரடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பந்திப்பூர் வனப்பகுதியில் கொண்டுபோய் வனத்துறையினர் நேற்று விட்டனர். கரடிக்கு 6 வயது இருக்கும் என்றும், அது ஆண் கரடி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

வலைவீச்சு

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் வனத்துறையினர் வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story