மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் கட்டிடம் + "||" + Rs.50 Lakh for building of inpatient assistants at Government Hospital premises

அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் கட்டிடம்

அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் கட்டிடம்
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி திறந்து வைத்தனர்.
திருச்சி,

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு உள்ளது. 25 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 50 பேர் தங்குவதற்கான அறைகள், குளியல் அறை, கழிப்பறை வசதியுடன் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த அறைகளில் துணி துவைக்க தனி இடம், சாப்பிடுவதற்கான கூடம், நிர்வாக அலுவலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டு உள்ளது.


இந்த விடுதியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். முன்னதாக, 8-வது வார்டு சஞ்சீவி நகரில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி உடற்பயிற்சி நிலையத்துடன் கூடிய பூங்காவையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த பூங்காவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடை பயிற்சி தளம், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், முகப்பு வளைவு, குடிநீர்தொட்டி எல்.இ.டி. விளக்குகள்அமைப்பு , 50 பேர் அமரும் வகையில் யோகா அரங்கம், 1,500 சதுரஅடியில் புல்வெளி தரை, சுற்றுச்சுவர், கண்காணிப்பு கேமரா, திடக்கழிவு தொட்டி, காவலர் அறை, கழிப்பிடம் ஆகியவை உள்ளன.

ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் அருகில் காந்தி சாலையில் மாநகராட்சி சார்பில் அன்பு சுவர் என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மையத்தையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். அன்புசுவர் மையத்தில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற ஆடைகள், புத்தகங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து விட்டு சென்றால் அவற்றை தேவையானவர்களுக்கு வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...