மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிய தாய்-மகள் உள்பட 3 பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு + "||" + 12 pound chains of 3 women, including mother-in-law who are sleeping at home

வீட்டில் தூங்கிய தாய்-மகள் உள்பட 3 பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு

வீட்டில் தூங்கிய தாய்-மகள் உள்பட 3 பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு
சிறுகனூர் அருகே வீட்டில் தூங்கிய தாய்-மகள் உள்பட 3 பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
சமயபுரம்,

திருச்சி மாவட்டம், சிறுகனூரை அடுத்த கண்ணாக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஞானசம்பந்தம். இவருடைய மனைவி தவமணி(வயது 57), மகள் சாந்தலெட்சுமி(29). கோவில் பூசாரியாக இருந்த ஞானசம்பந்தம் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அங்குள்ள வீட்டில் தவமணி, சாந்தலெட்சுமியுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் தவமணியின் தாய் வீரம்மாளும்(75) உள்ளார்.


நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தவமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, வீரம்மாள் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, சாந்தலெட்சுமி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

சிறிது நேரம் கழித்து தூக்கம் கலைந்து கண் விழித்த 3 பேரும் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் அவற்றை பறித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து நேற்று காலை தவமணி சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருச்சியில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார், தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு மளிகைக்கடை உரிமையாளர் கைது
வேதாரண்யம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மளிகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
2. பெரம்பலூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் நடை பயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கிருஷ்ணகிரியில் கணவன் கண் முன்பு துணிகரம்: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு
கிருஷ்ணகிரியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் அவரது கணவன் கண் முன்பே கத்தியை காட்டி நகையை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. மூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை
அகஸ்தீஸ்வரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து, மூதாட்டியிடம் 1½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. தஞ்சையில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு
தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...