பள்ளிக்கு கொண்டு செல்ல தடை: செல்போன்களை கடையில் கொடுத்து வைக்கும் மாணவிகள்


பள்ளிக்கு கொண்டு செல்ல தடை: செல்போன்களை கடையில் கொடுத்து வைக்கும் மாணவிகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:26 PM GMT (Updated: 8 Dec 2018 10:26 PM GMT)

செல்போன்களை பள்ளிக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் மாணவிகள் கடையில் கொடுத்து விட்டு செல்கிறார்கள்.

திருப்பூர்,

மாணவ-மாணவிகள் பள்ளிகளில் செல்போனை உபயோகிக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை கண்டிப் பான உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால் தலைமையாசிரியர்கள் மாணவ-மாணவிகளின் புத்தகப்பை களை சோதனை செய்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சோதனையில் செல்போன் கண்டுபிடிக்கப் பட்டால், அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு பெற்றோரை வரவைத்து அவர்கள் முன்னால் மாணவர்களை எச்சரித்து பெற்றோரிடம் போனை கொடுத்து அனுப்புகிறார்கள். இதனால் கோபம் அடையும் பெற்றோர் பள்ளியி லேயே மாணவர்களை திட்டுவதும், சிலபேர் அடித்து விடுவதுமான சம்பவங்களும் நடக்கின்றன. இந்த பிரச்சினைகளால் தற்போது மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்போன்களை கொண்டு வருவது குறைந்துள்ளது.

ஆனாலும் பல மாணவ-மாணவிகள் செல்போன் தான் உலகம் என்ற நிலையில் உள்ளார்கள். அதிலும் சிலர் பள்ளிப்பருவத்திலேயே காதலில் சிக்கி விடுகிறார்கள். இதனால் இந்த காதலர்கள் நிலையை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு விலைஉயர்ந்த செல்போன் களை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனை பள்ளிக்கு கொண்டு வந்து ஆசிரியர்களிடம் சிக்கிக் கொண்டால், அந்த போன் எப்படி தன்னிடம் வந்தது என்று பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாமல், பெற்றோர் கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்று தற்போது ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்கள்.

காலையில் பள்ளிக்கு வரும் போது மாணவிகள் பழைய பஸ்நிலையத்தில் உள்ள ஒரு கடையில் தங்கள் செல்போன்களை கொடுத்து விட்டு அதற்காக ஒரு டோக்கனை பெற்றுக்கொள்கிறார்கள். மாலையில் பள்ளி முடிந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் போது அந்த டோக்கனை கொடுத்து தங்கள் செல்போனை திரும்ப வாங்கி கொள்கிறார்கள். அதற் காக ரூ.10 வாடகையும் கொடுக்கிறார்கள். பின்னர் போனில் தங்கள் காதலர் களுடன் பேசி விட்டு செல்போனை சைலண்ட்டில் வைத்துக் கொண்டு, தங்கள் புத்தகப்பையில் மறைத்து வைத்து வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள்.

இவ்வாறு மாணவர்கள் பெற்றோரை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கை சீரழியும் என்பதை இவர்கள் எப்போது தான் உணரப்போகிறார்களோ என்று தெரிய வில்லை.

எனவே பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் இதனை கண்காணிக்க வேண்டும். போலீசாரின் கழுகு பார்வை மாணவர் களின் மீது பட்டால் மட்டுமே இவர்களின் எண்ணம் திசை மாறுவது தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



Next Story