வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது


வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது
x
தினத்தந்தி 9 Dec 2018 5:00 AM IST (Updated: 9 Dec 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்த சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

புனே,

புனேயில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்த சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பழித்து கொலை

புனே, சின்காத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார்.

மாலை சிறுமியின் தம்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது அவள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவள் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சித்தப்பா கைது

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத் தினர். இதில், அவளது சித்தப்பா நித்தின் (வயது 33) என்பவர்தான் அவளை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவத்தன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அந்த நேரத்தில் வீட்டிற்கு சென்ற நித்தின் சிறுமியை கற்பழித்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story