காளப்பநாயக்கன்பட்டியில் 3,698 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்


காளப்பநாயக்கன்பட்டியில் 3,698 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 7:39 PM GMT)

காளப்பநாயக்கன்பட்டியில் 3 ஆயிரத்து 698 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

சேந்தமங்கலம், 

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.

சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, சுந்தரம் எம்.பி., உதவி கலெக்டர் கிராந்திகுமார்பதி, சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 3 ஆயிரத்து 698 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். தற்போது அரசு பள்ளி மாணவர்கள் தான் அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கி, தேசிய அளவில் பரிசுகள் வாங்கி சாதனை படைத்து வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் அட்மா குழு தலைவர் வருதராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகரன், முன்னாள் தலைவர் சண்முகம், துணைத்தலைவர் ரமேஷ், ஒன்றிய மீனவரணி செயலாளர் பாஸ்கர், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.

Next Story