ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 2018-12-10T01:39:41+05:30)

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் கேட்டுகடையில் தேசிய சட்ட உரிமைகள் கழகம், தேசிய ஊழல் எதிர்ப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குருநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேட்டுக்கடையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடக்கும் கோழி வாரச்சந்தை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், இடமாற்றம் செய்யவேண்டும்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிச்கட்டு விழாவை நினைவு கூரும் வகையில் காளையை வீரர் அடக்கும் ஜலிலிக்கட்டு நினைவு சின்னம் கேட்டுக்கடை சந்திப்பில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மலைச்சாமி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


Next Story