புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

வேதாரண்யம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் வட்டம் சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பொது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புயலால் சேதமடைந்த வீடுகள், படகுகள், வலைகள், உபகரணங்கள் மற்றும் கோடியக்கரை பகுதியில் புயலால் சேதமடைந்துள்ள உப்பள பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள மீனவர்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

சிறுதலைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தினை பார்வையிட்டு, அங்குள்ள குடிநீர் தொட்டியினை ஆய்வு செய்தார். மேலும் தொற்று நோய் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கும் படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு, கணக்கெடுப்பு விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

ஆய்வின் போது அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story