வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 42 பேர் அதிரடி இடமாற்றம்


வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 42 பேர் அதிரடி இடமாற்றம்
x
தினத்தந்தி 10 Dec 2018 3:45 AM IST (Updated: 10 Dec 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 42 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி என 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே, மாவட்டம் முழுவதும் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 27 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) முகமது மாலிக் ரெட்டியார்சத்திரத்துக்கும் (கி.ஊ.), அங்கு பணிபுரிந்த வசந்தா வடமதுரைக்கும் (கி.ஊ.) மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல வடமதுரையில் (கி.ஊ.) பணியாற்றிய குருவானந்தம் சாணார்பட்டிக்கும் (வ.ஊ), அங்கு பணியாற்றிய அந்தோணியார் நத்தத்துக்கும் (கி.ஊ) மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சீதாராமன் ஆத்தூருக்கும் (வ.ஊ), நத்தத்தில் பணியாற்றிய லாரன்ஸ் (கி.ஊ) வடமதுரைக்கும் (வ.ஊ.) மாற்றப்பட்டுள்ளனர். சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) மணிமுத்து வேடசந்தூருக்கும், வத்தலக்குண்டு விஜயசந்திரிகா ரெட்டியார்சத்திரத்துக்கும், ஆத்தூர் ஜெயச்சந்திரன் வத்தலக்குண்டுவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், மனோகரன், சுமதி, இந்திராணி, கீதாராணி, சரவணன், அருள்கலாநிதி உள்பட மொத்தம் 42 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story