பணம் கொடுக்க மறுத்த காதலியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றிய என்ஜினீயர் கைது
பணம் கொடுக்க மறுத்த காதலியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை, டிச.10-
பணம் கொடுக்க மறுத்த காதலியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினார்
மும்பை தகிசர் பகுதியை சேர்ந்தவர் சவுரப் குமார்(வயது24). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் சமூகவலைதளம் மூலம் அறிமுகம் ஆனார். சவுரப் குமார் ஆசை வார்த்தைகளை கூறி, இளம்பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் அவர் ஜார்க்கண்டிற்கு அடிக்கடி சென்று இளம்பெண்ணை தனிமையில் சந்தித்து உள்ளார். அப்போது அவர் இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து உள்ளார்.
சமீபத்தில் வாலிபர் இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் கேட்டார். மேலும் பணம் தரவில்லையென்றால் தான் வைத்திருக்கும் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டினார்.
என்ஜினீயர் கைது
இளம்பெண் அவ்வளவு பெரிய தொகை தரமுடியாது என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இளம்பெண்ணின் ஆபாச படத்தை இணைய தளத்தில் பதிவேற்றினார். இதுகுறித்து அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தேரி பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்த சவுரப் குமாரை கைது செய்து, விசாரணைக்காக ஜார்க்கண்ட் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story