மாவட்ட செய்திகள்

காரிமங்கலத்தில்கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை + "||" + In karimankalat 20-pound jewelry robbery at the housekeeper's businessman

காரிமங்கலத்தில்கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

காரிமங்கலத்தில்கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
காரிமங்கலத்தில் கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 39). கோணிப்பை வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 8-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குரும்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு 2 பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தர்மபுரி தடயவியல் நிபுணர்களும் விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அகரம்சேரி அருகே பயங்கரம்: மூதாட்டியை கொன்று நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அகரம்சேரி அருகே மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. கோவையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
கோவை ஒண்டிப்புதூரில் மூதாட்டியை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு அவர் அணிந்து இருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
3. ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம், 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில் நள்ளிரவில் 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கு, என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது
கோவை அருகே நடைபெற்ற ரூ.1 கோடி நகை கொள்ளையில் தொடர்புடைய என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ நகைகள் மீட்கப்பட்டன.
5. சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை - 4 பேரிடம் போலீசார் விசாரணை
திசையன்விளையில் சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.