தனியார் நிறுவனத்தில் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறையினர் ஆய்வு


தனியார் நிறுவனத்தில் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 8:23 PM GMT)

துவாக்குடி அருகே தனியார் நிறுவனத்தில் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.

திருவெறும்பூர்,

மத்திய அரசு மத்திய பாதுகாப்பு துறை சார்பில் பாதுகாப்புத்துறைக்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து, அவர்களிடம் இருந்து பாதுகாப்புத்துறைக்கு கொள்முதல் செய்யப்படும் என்று அண்மையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே தேவராயநேரியில் உள்ள ஒரு தனியார் ஹெல்மெட் நிறுவனம் பாய்லர்ஆலை உள்ளிட்ட நிறுவனங்களின் தீயணைப்பு துறையினர், காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கு தேவையான ஹெல்மெட்டுகளை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனம் ராணுவத்திற்கு தேவையான குண்டு துளைக்காத ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளை தயாரித்து மத்திய பாதுகாப்புத்துறைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

அவ்வாறு அந்த நிறுவனம் தயாரித்த ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட் மாதிரிகளை மத்திய பாதுகாப்புத்துறை தர ஆய்வுக்குழுவைச் சேர்ந்த 5 பேர் பேனர்ஜி என்பவர் தலைமையில், அந்த நிறுவனத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, மீண்டும் மத்திய பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்வார்கள். அப்போது இங்கு தயாரிக்கப்படும் புல்லட் புரூப் ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளை 9 எம்.எம். குண்டு களால் சுடும்போது, அது துளைக்காமல் இருக்க வேண்டும். மேலும் ஆய்வுக்குழுவினர் ஆலோசனைப்படி ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்படும். அதற்கு அவர்கள் அனுமதி தரவேண்டும் என்று தனியார் நிறுவன பொது மேலாளர் சவுரிராஜன் கூறினார்.

Next Story