ஊரக வேலை உறுதித்திட்ட பணி கேட்டு மனு கொடுக்க வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள் அதிகாரிகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


ஊரக வேலை உறுதித்திட்ட பணி கேட்டு மனு கொடுக்க வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள் அதிகாரிகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
x
தினத்தந்தி 11 Dec 2018 4:00 AM IST (Updated: 11 Dec 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணி கேட்டு மனு கொடுக்க வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று கிராம மக்கள் திரண்டு வந்தனர். அங்கு அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆட்டையாம்பட்டி,

வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனைக்குட்டப்பட்டி ஊராட்சி பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வீரபாண்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் தங்களுக்கு ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணி வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்க வந்ததாக அங்கிருந்த பணியாளர்களிடம் தெரிவித்தனர்.

அதற்கு அங்கிருந்த பணியாளர்கள், தற்போது அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை கள ஆய்வுக்காக சென்றுள்ளனர் என்று கூறினர். இதையடுத்து கிராம மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுக்காமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து ஊருக்கு திரும்பி சென்றனர்.

இது குறித்து ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கூறும் போது, ‘ஆனைக்குட்டப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணி கேட்டு கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் இல்லை என்பதால் கோரிக்கை மனுவை அவர்கள் கொடுக்காமல் திரும்பி சென்றனர்‘ என்றார்கள்.

Next Story