ஆசனூர் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவு செய்த சிறுத்தைகளின் அரிய படங்கள்


ஆசனூர் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவு செய்த சிறுத்தைகளின் அரிய படங்கள்
x
தினத்தந்தி 11 Dec 2018 4:45 AM IST (Updated: 11 Dec 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைகளின் அரிய படங்கள் பதிவாகியுள்ளன.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம் என 7 வனச்சரகங்கள் உள்ளன.

இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனச்சரகங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன்பு, மழைக்காலத்திற்கு பின்பு என 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.

வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும், வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிக்கு உதவியாக இருக்கவும், வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசனூர் வனகோட்டத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறையினர் அமைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் பல்வேறு அரிய புகைப்படங்கள் பதிவாகியுள்ளன.

வனப்பகுதிகளின் பல்வேறு இடங்களில் சிறுத்தைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகள், மிரட்டலாக பார்க்கும் காட்சிகள் உள்ளன.


Next Story