ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு: லாரிகள் சிறைபிடிப்பு


ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு: லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 4:00 AM IST (Updated: 11 Dec 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே ஏரியில் சவுடு மண் எடுத்த லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த வெண்பேடு ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் சவுடு மண் எடுப்பதற்கு கலெக்டர் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால் அந்த பகுதி மக்கள் எதிர்த்தும் நேற்று காலை 20–க்கும் மேற்பட்ட லாரிகளில் 4 பொக்லைன் எந்திரம் மூலம் சவுடு மண் எடுத்துக்கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது ஏரியில் மண் எடுப்பதால் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கும். வெண்பேடு ஏரியில் பள்ளம் தோண்டி மண் எடுக்க தொடங்கினால் கலெக்டர் உத்தரவிட்ட ஆழத்தை விட அதிகமாக தோண்டிவிடுவார்கள் என்று கூறினர்.

பின்னர் வருவாய் துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் முறையிட்டனர். இதையடுத்து ஏரியில் சவுடு மண் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


Next Story