வைத்தீஸ்வரன்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


வைத்தீஸ்வரன்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Dec 2018 4:15 AM IST (Updated: 12 Dec 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

வைத்தீஸ்வரன்கோவிலில், கிராம நிர்வாக அலுவலர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர்.

சீர்காழி,

மின்வசதி மற்றும் கழிவறை வசதியுடன் கிராம நிர்வாக அலுவலக கட்டித்தர வேண்டும், மாவட்ட மாறுதல், தரமான கணினி வசதி, இணைய சேவைக்கு கட்டணம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

துண்டு பிரசுரங்கள்

நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சீர்காழி வட்ட கிளை தலைவர் பவளசந்திரன் தலைமையில் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது சங்க செயலாளர் நவநீதன், பொருளாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணை தலைவர் ஜாகீர்உசைன், மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 43 கிராம நிர்வாக அலுவலர்கள் இருந்தனர். கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் இருப்பிடம், வருமானம், சாதி, பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றுகள் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Next Story