மாவட்ட செய்திகள்

நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு + "||" + Child dead fallen on the lake near Nagasasampatti

நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு

நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு
நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்து 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.
காவேரிப்பட்டணம்,    

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள பேருஹள்ளியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் வெங்கடேசன் (வயது 3½). இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை குழந்தை வெங்கடேசன் சுண்டகாப்பட்டி அருகே உள்ள அத்திக்குட்டை ஏரிக்கரை அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.


அப்போது தண்ணீரை பார்த்ததும் அந்த குழந்தை ஏரிக்குள் இறங்க முயன்றது. அந்த நேரம் எதிர்பாராதவிதமாக குழந்தை ஏரியில் தவறி விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக நெடுங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக குழந்தையை காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்து பலன் அளிக்காமல் குழந்தை வெங்கடேசன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் 7 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
2. அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
அருமனை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
3. மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. வி‌ஷ வாயு தாக்கி 4 பேர் பலி: திருப்பூரில் சலவை ஆலைக்கு சீல் வைப்பு மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் அதிரடி
வி‌ஷ வாயு தாக்கி 4 பேர் பலியானதை தொடர்ந்து திருப்பூர் சலவை ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
5. திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி அண்ணன்- தம்பி உள்பட 4 தொழிலாளர்கள் பலி
திருப்பூர் அருகே சலவை ஆலை கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சரி செய்ய இறங்கியபோது விஷவாயு தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.