மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி + "||" + The five-pound jewelery was thrown at the hospital after the injuries were struck

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி
வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தின்போது கொள்ளையர்கள் தாக்கியதால் காயம் அடைந்த மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு பூசாரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் (வயது75). சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் பட்டம்மாள் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தனர். பின்னர் அவருடைய காதில் அணிந்திருந்த 1 பவுன் தோடையும் கழற்றினர்.


இதனால் கண் விழித்த பட்டம்மாள், மர்ம நபர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் பட்டாம்மாளை விடாமல் பிடித்து, தோடையும் கழற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

காதில் அணிந்திருந்த தோடை கழற்றியபோது பட்டம்மாள், மர்ம நபர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.அப்போது கொள்ளையர்கள் தாக்கியதால் அவருடைய காதில் காயம் ஏற்பட்டது. காதில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில் வலியால் அலறி துடித்த அவரை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் பட்டம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு மூதாட்டியிடம் சங்கிலி, தோடு உள்ளிட்ட 5 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் வங்கி லாக்கரில் 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சம் பறிமுதல்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் இருந்த 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
2. தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம், 15 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பொள்ளாச்சியில் அடுத்தடுத்து சம்பவம், 4 வீடுகளில் நகை, பணம் திருட்டு - மின்தடையை பயன்படுத்தி கும்பல் கைவரிசை
பொள்ளாச்சியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்றனர். மின்தடையை பயன்படுத்தி ஒரே கும்பலை சேர்ந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.
4. வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை
வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. மேச்சேரி அருகே பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
மேச்சேரி அருகே பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...