போலீஸ்காரர் மீது காரை ஏற்ற முயன்ற பெண் வக்கீல் மகன் கைது
போலீஸ்காரர் மீது காரை ஏற்ற முயன்ற பெண் வக்கீல் மகன் கைது செய்யப்பட்டார்.
தானே,
தானேயில் உள்ள சாலையில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த கார் சிக்னலை மீறிச்சென்றது. அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் காரை வழிமறித்து, அதனை ஓட்டி வந்த வாலிபரிடம் ஒட்டுனர் உரிமத்தை காட்டுமாறு கேட்டார். அதற்கு அந்த வாலிபர் ஓட்டுனர் உரிமத்தை காட்ட மறுத்து தகராறு செய்தார்.
மேலும் நான் அரசு வக்கீலின் மகன் என்று கூறி போலீஸ்காரரை எச்சரித்ததுடன் அவர் மீது காரை ஏற்ற முயற்சி செய்து உள்ளார். இதில், போலீஸ்காரர் அதிர்ஷ்டவசமாக தப்பித்து விட்டார். இதையடுத்து அவர் நவ்பாடா போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், கைதான வலிபரின் பெயர் ஆதித்யா பட்(வயது18) என்பதும், அவரது தாய் அரசு வக்கீலாக இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் ஆதித்யா பட்டை மாஜிஸ்திரேட் கோா்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story