ஒரே கட்சியின் ஆட்சியை நிறுவ முயற்சித்தவர்களுக்கு பாடம் புகட்டிய மக்கள் - 5 மாநில தேர்தல் முடிவு குறித்து குமாரசாமி கருத்து


ஒரே கட்சியின் ஆட்சியை நிறுவ முயற்சித்தவர்களுக்கு பாடம் புகட்டிய மக்கள் - 5 மாநில தேர்தல் முடிவு குறித்து குமாரசாமி கருத்து
x
தினத்தந்தி 12 Dec 2018 4:41 AM IST (Updated: 12 Dec 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் ஒரே கட்சியின் ஆட்சியை நிறுவ முயற்சி செய்தவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

5 மாநில தேர்தல் முடிவு குறித்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

5 மாநிலங்களில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு, நாடு மதசாா்பற்ற கட்சிகளை நோக்கி செல்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. எதிர்க்கட்சிகளை அழித்து நாடு முழுவதும் ஒரே கட்சியின் ஆட்சியை நிறுவ முயற்சி செய்தவர்களுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவு, மதசார்பற்ற கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி மற்றும் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

இதற்காக அவர்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே கொள்கை கொண்ட கட்சிகளை ஓரணியில் சேர்க்கும் பணியை ராகுல் காந்தி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story