வேகமாக தீயை அணைக்கும் தண்ணீர் துப்பாக்கி
மனிதனுடைய ஆர்வத்தை அதிகரிப்பதற்கு மட்டுமின்றி ஆபத்திலும் உதவிடும் பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது ஆரோக்கியமான விஷயம். தீயணைப்பு துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பைரோலான்ஸ் துப்பாக்கி.
நீண்ட சுவருக்கு பின்னே கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பது மிகவும் கடினமான செயல். இந்த பைரோலான்ஸ் கருவி ஒரு தண்ணீர் துப்பாக்கி போல செயல்பட்டு சுவற்றில் சிறிய அளவிலான துளையை ஏற்படுத்தும். அந்த துளையின் வழியே நீரை அதிவேகமாக பீய்ச்சி அடித்து தீயை அணைத்து விடுகிறது. அதீதமான அழுத்தத்தில் இயங்கும் அல்ட்ராஹை பிரஷர் தொழில்நுட்பம் ( UHP) மூலம் இது சாத்தியமாகிறது. கான்கிரீட், ஸ்டீல் மற்றும் செங்கல் போன்ற எல்லா வகை சுவற்றிலும் இது ஓட்டை போடும் சக்திவாய்ந்தது.
மனித முயற்சியால் அதிக நேரம் கொண்டு செய்ய வேண்டியதை இந்த தண்ணீர் துப்பாக்கி ஒரு நிமிடத்திற்குள்ளாகவே செய்து முடித்து விடும். சேதாரமும் அதிகமின்றி பாதுகாக்கும்.
Related Tags :
Next Story