உபைன் டிஸ்பிளே


உபைன் டிஸ்பிளே
x
தினத்தந்தி 12 Dec 2018 12:02 PM IST (Updated: 12 Dec 2018 12:02 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்ணாடியுடன் சேர்த்து அணிந்து கொள்ளும் வகையிலான சிறிய திரை கொண்ட கருவியை உருவாக்கியுள்ளது. வேரபிள் டிஸ்பிளே என்ற பெயரில் புதிய கண்ணாடி ஸ்கிரீனை உருவாக்கியுள்ளது. இதை கண்ணாடியுடன் இணைத்து போட்டுக் கொள்ளலாம்.

கண்ணாடி லென்ஸுக்கு ஏற்ப இது அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்றவற்றுடன் இணைக்க முடியும். இதனுள் பேட்டரி இருப்பதால் இது தொடர்ந்து 90 நிமிடங்கள் செயல்படும். தேவைப்படும்போது ரீசார்ஜ் செய்ய முடியும். ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகளில் உள்ள படங்களை இதன் மூலம் பார்க்க முடியும். காரில் செல்லும்போது ஸ்மார்ட்போனில் வழிகளைக் கண்டுபிடிக்க நேவிகேஷன் வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் அமேசான் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இதன் விலை 199 டாலர்.


Next Story