முட்டைகளை வேகவைக்கும் கருவி
வோன்ஷெப் நிறுவனம் முட்டை வேக வைக்கும் குக்கரை அறிமுகம் செய்துள்ளது.
புரத சத்து நிறைந்த உணவுகளில் முட்டைக்கு முக்கிய இடமுண்டு. முட்டையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்களுக்கூட புரதம் கிடைக்கும். வோன்ஷெப் நிறுவனம் முட்டை வேக வைக்கும் குக்கரை அறிமுகம் செய்துள்ளது. மின்சாரத்தில் செயல்படும் இந்த குக்கரில் அதிகபட்சம் 7 முட்டைகளை வேக வைக்க முடியும். முட்டையை எத்தகைய பதத்தில் வேண்டுமானாலும் வேகவைக்க முடியும். முட்டையை உடைத்து அதில் விருப்பமான வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து தட்டில் வைத்து வேக வைத்து சாப்பிடவும் முடியும். ஆப் பாயிலும் தயாரிக்கலாம். எண்ணெய் சேர்க்காத ஆம்லெட்டும் இதில் தயாரிக்கலாம்.
இதில் உள்ள பவர் இண்டிகேட்டர் உரிய கொதி நிலையை எட்டியவுடன் முட்டை எந்த பதத்தில் வேக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை எட்டியவுடன் தானாக அணைந்துவிடும். இதைக் கையாள்வதும் எளிது.
இதன் விலை 14 டாலர். அமேசான் இணையதளம் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.
Related Tags :
Next Story