குளிர்காலத்துக்கு இதமான ஹீட்டர்
தையல் மிஷின் தயாரிக்கும் சிங்கர் நிறுவனத்தின் ஹீட்டர்கள் கைக்கு அடக்கமான வடிவில் வந்துள்ளது.
குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. இனி பொங்கல் (தை மாதம்) வரை குளிர்தான். இரவு நேரத்தில் நிம்மதியாக உறங்க, அறையை கத கதப்பாக வைத்திருக்க உதவுகிறது ஹீட்டர்கள். ஏ.சி.யைப் போன்றே வெப்பமான காற்றை இது வெளியிடும். இதை நிறுவுவதும் எளிது.
பல்வேறு நிறுவனங்களும் இத்தகைய ஹீட்டர்களைத் தயாரிக்கின்றன. அந்த வரிசையில் தையல் மிஷின் தயாரிக்கும் சிங்கர் நிறுவனத்தின் ஹீட்டர்கள் கைக்கு அடக்கமான வடிவில் வந்துள்ளது. வெப்ப காற்றின் அளவை தேர்வு செய்து கொள்ளும் வசதி, எடுத்துச் செல்ல வசதியாக கைப்பிடி, தெர்மோ ஸ்டாட் உள்ளிட்டவை இதில் உள்ளது. இது 2000 வாட்ஸ் திறன் கொண்டது. இதை இரண்டு வகைகளில் நிறுவ முடியும்.
இதன் விலை ரூ.1,400. குளிர்காலத்தில் கத கதப்பான தூக்கத்தை அளிக்க உதவும் ஹீட்டர்களை அறையின் அளவுக்கேற்ப வாங்கி நிம்மதியாக உறங்கலாமே.
Related Tags :
Next Story