கலெக்டர் ஷில்பா அறிவிப்பு அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள்
நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்களின் நலன் கருதி அம்மா திட்டம் என்ற திட்டத்தை அறிவித்தார். இந்த திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் கீழ்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
நெல்லை தாலுகா–துலுக்கர்குளம், ராதாபுரம் தாலுகா– அடங்கார்குளம், அம்பை தாலுகா–மேலக்கடையம், நாங்குநேரி தாலுகா–நாங்குநேரி, சேரன்மாதேவி தாலுகா–ஓமநல்லூர், பிராஞ்சேரி, சொக்கலிங்கபுரம், பாளையங்கோட்டை தாலுகா–பாறைக்குளம்.
மானூர் தாலுகா–சேதுராயன், சங்கரன்கோவில் தாலுகா–பொய்கை, திருவேங்கடம் தாலுகா–மருதங்கிணறு, வீரகேரளம்புதூர் தாலுகா–ஜமீன்சுரண்டை, ஆலங்குளம் தாலுகா–ஐந்தாங்கட்டளை, சிவகிரி தாலுகா–அரியூர், கடையநல்லூர் தாலுகா–வைரவன்குளம், திசையன்விளை தாலுகா–ராமகிருஷ்ணாபுரம்.
உழவர் பாதுகாப்பு அட்டைகள்
இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவி தொகை, நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகைக்கான மறுபரிசீலனை விண்ணப்பம், உழவர் பாதுகாப்பு அட்டைகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கலாம். கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story