கும்பகோணத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடிகை கவுதமி பரிசு வழங்கினார்
கும்பகோணத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை கவுதமி பரிசு வழங்கினார்.
கும்பகோணம்,
கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கான மாரத்தான் ஒட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 1,500 மாணவிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து ஓட்டத்தை தொடங்கிய மாணவிகள் நகரம் முழுவதும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி மீண்டும் பள்ளியை அடைந்தனர். ஒரே நேரத்தில் 1,500 மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு நகரை சுற்றி ஓடி வந்ததால் கும்பகோணம் நகரில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் ஆங்காங்கே வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர். இதைத்தொடர்ந்து கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடிகை கவுதமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
மாணவிகள் உடல் ஆரோக்கியத்துடனும், தைரியத்துடன் உயர்ந்த கொள்கையுடன் வாழ வேண்டும். தன்னை தானே தாழ்த்தி கொள்ள கூடாது. வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள், வலிகளை சமமாக வைத்து கொள்ள வேண்டும்.
எனவே மாணவிகள் தங்களுக்கான உரிமைகளுடன் வாழ வேண்டும். நல்ல அறிவுரை கூறும் நண்பர்களை வைத்துகொள்ள வேண்டும். கஷ்டம் வரும் போது வெற்றிபெறுவேன் என்ற மன உறுதியுடன் இருக்க வேண்டும். நாம் வாழும் வாழ்க்கையில் நல்லது, கெட்டதை புரிந்து கொண்டு வாழ வேண்டும். சந்தோஷமாக இருப்பது போல நடிக்ககூடாது. மாணவிகள் தங்களின் உடலை கவனமுடன் பேண வேண்டும்.
புற்று நோய் உள்ளிட்ட நோய்களை வராமல் தடுப்பதற்கான வழிகளில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சிட்டியூனியன் வங்கி முதன்மை திட்ட அதிகாரி பாலசுப்பிரமணியன், ரோட்டரி உதவி ஆளுனர்கள் சவுமியநாராயணன், சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

Related Tags :
Next Story