‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேப்பனப்பள்ளியில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 3 மாநிலங்களின் எல்லை பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடை இல்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பலர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி தீர்த்தம், கே.ஜி.எப்.கூட்டுரோடு, கொத்தகிருஷ்ணப்பள்ளி கூட்டுரோடு, நாச்சிகுப்பம் கூட்டுரோடு, குப்பம் கூட்டு ரோடு, மாதேப்பள்ளி கூட்டுரோடு, பச்சைமலை முருகன் கோவில் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நாச்சிகுப்பம் கூட்டுரோடு, குப்பம் கூட்டுரோடு உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டது. மேலும் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களிலும் வேகத்தடை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் நலன்கருதி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story