கடந்த 2 ஆண்டுகளில் 32,471 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் கலெக்டர் கணேஷ் தகவல்


கடந்த 2 ஆண்டுகளில் 32,471 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் கலெக்டர் கணேஷ் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 13 Dec 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 32,471 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை விலையில்லாமல் வழங்கும் வகையில் பள்ளி கல்வித்துறையின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி பயிலும் வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள், பஸ் பயண அட்டை, மடிக்கணினி, சீருடைகள், வண்ண பென்சில்கள், கிரையான்ஸ், புத்தகப்பை, நோட்டுகள், மிதிவண்டி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

32,471 மாணவர்களுக்கு

குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வர விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய 2 கல்வி ஆண்டில் 14 ஆயிரத்து 55 மாணவர்களுக்கும், 18 ஆயிரத்து 416 மாணவிகளுக்கும் என மொத்தம் 32 ஆயிரத்து 471 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கல்வி திறன் உயர்ந்துள்ளது. எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் மாணவ, மாணவிகள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story