காவிரியில் 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கக்கோரி கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காவிரியில் 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கக்கோரி கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:30 PM GMT (Updated: 12 Dec 2018 9:05 PM GMT)

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் கிராமத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் கருப்புக்கொடியுடன் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் கிராமத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் கருப்புக்கொடியுடன் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கருகும் சம்பா, தாளடி பயிர்களை காப்பாற்ற காவிரியில் 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்.

ஆற்று நீரை நம்பி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் போதுமான தண்ணீர் கிடைக்காததால் நீர்நிலைகளில் இருந்து டீசல் என்ஜின்களை பயன்படுத்தி நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் காலி டீசல் கேன்களை தலையில் சுமந்தபடி பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஏரகரம் தலைவர் சுவாமிநாதன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் முருகேசன் மாவட்ட பொருளாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story