கணவரை பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து விட்டு பெண் தற்கொலை - திருப்பூரில் பரிதாபம்


கணவரை பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து விட்டு பெண் தற்கொலை - திருப்பூரில் பரிதாபம்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 13 Dec 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

கணவரை விட்டு பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அனுப்பர்பாளையம்,

கணவரை விட்டு பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி மலையரசி (வயது 25). இவர்களுடைய மகன் சிவா (5). இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மலையரசி, தனது கணவரை பிரிந்து மகனுடன் அதே பகுதியில் உள்ள அவருடைய அக்காள் லட்சுமி என்பவருடைய வீட்டில் வசித்து வந்தார்.

கணவரை பிரிந்து வந்ததால் மலையரசி கடும் மனஉளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த மலையரசி மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதற்காக அவர் அரளி விதையை அரைத்து முதலில் மகன் சிவாவுக்கு கொடுத்தார். பின்னர் அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிறுவன் சிவாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





Next Story