களியக்காவிளை அருகே போலீஸ் ஏட்டு மீது கல்வீச்சு: கேரள கம்யூனிஸ்டு பிரமுகர் கைது
களியக்காவிளை அருகே போலீஸ் ஏட்டு மீது கல்வீசி தாக்கிய வழக்கில் கேரள கம்யூனிஸ்டு பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்கக்கோரி சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள பளுகல் கூனம்பனை பகுதியில் கேரள எல்லையையொட்டி ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியின் 75-வது ஆண்டு விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. சம்பவத்தன்று இரவு 10 மணியை கடந்தும் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால், போலீசார் பள்ளியின் நிர்வாகிகளை சந்தித்து நிகழ்ச்சியை விரைவாக முடிக்க கூறினர்.
இதனால், ஆத்திரமடைந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்து போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு கணேஷ்குமாரின் மண்டை உடைந்தது.
இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கேரள மாநிலம் வண்டித்தடம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது 32), காரக்கோணம் பகுதியை சேர்ந்த வின்ஸ், ஷாஜி ஆகிய 3 பேர் போலீஸ் ஏட்டு மீது கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றது தெரியவந்தது. அதன்பேரில் ராஜேஷ் உள்பட 3 பேர் மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, கேரளா மாநிலம் காரக்கோணத்தை சேர்ந்த கம்யூனிஸ்டு செயலாளரான குமார்(வயது 36) என்பவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் குமார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பளுகல் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுக்கு மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து வில்சன் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பணியில் இருந்தபோது சிலர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து மலையாளத்தில் தகாத வார்த்தையால் பேசினர். மேலும், குமாரை விடாவிட்டால் கணேஷ்குமாரை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இவ்வாறுமனுவில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story