நெல் விவசாயம் கைகொடுக்காததால் விவசாயிகள் வேதனை
நெல் விவசாயம் கைகொடுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதுபற்றி நெடுங்குறிச்சி பகுதி விவசாயிகள் கூறியதாவது:– நயினார்கோவில் யூனியன் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி விட்டன.
இதேபோல இந்த ஆண்டும் சரியான நேரத்தில் மழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுஉள்ளது. கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காத நிலையில் இப்பகுதி விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்டோம். ஆனால் விவசாயம் கைகொடுக்காததால் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளோம்.
இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. பயிர் இழப்பீட்டு தொகை கிடைத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story