துபாயில் இருந்து மதுரைக்கு கடத்திய ரூ.4 லட்சம் தங்கம் பறிமுதல்; ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சிக்கினார்


துபாயில் இருந்து மதுரைக்கு கடத்திய ரூ.4 லட்சம் தங்கம் பறிமுதல்; ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:34 PM GMT (Updated: 12 Dec 2018 10:34 PM GMT)

துபாயில் இருந்து மதுரைக்கு கடத்திய ரூ.4 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலாவூதின் மகன் குட்புதீன் (வயது 41) என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள், அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த உள்ளாடையில் கடத்தல் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகளின் சோதனையில் தங்கத்தை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர் தங்கத்தை உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து குட்புதீனிடம் இருந்த ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 100 மதிப்பிலான 130 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story