பா.ஜனதா எம்.பி.யை திட்டியதாக 5 பேர் கைது


பா.ஜனதா எம்.பி.யை திட்டியதாக 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 5:34 AM IST (Updated: 13 Dec 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

சண்டையை விலக்க சென்ற பா.ஜனதா எம்.பி.யை திட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வசாய், 

தானே பயந்தரில் நேற்றுமுன்தினம் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு சென்ற பால்கர் தொகுதி பா.ஜனதா எம்.பி. ராஜேந்திரா காவித் அவர்களின் சண்டையை விலக்கி சமாதானப்படுத்த முயன்றார். இதில், கோபம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்த சிலர் எம்.பி.யை தகாத வார்த்தையால் திட்டினார்கள்.

இதுபற்றி நயாநகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.பி.யை திட்டியதாக 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story