பாலியல் புகார் எதிரொலி : டைரக்டர் சங்கத்தில் இருந்து சாஜித் கான் இடைநீக்கம்
“மீ டூ” இயக்கத்தை தொடர்ந்து இந்தி சினிமா டைரக்டரும், நடிகருமான சாஜித் கான் மீது 2 நடிகைகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர்.
மும்பை,
பாலியல் புகார்களை விசாரிக்க இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சாஜித் கானிடம் அவர் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறியது. ஆனால் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதையடுத்து இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து அவர் 1 ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகாரின் காரணமாக சாஜித் கான் “ஹவுஸ்புல்-4” படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story