புத்துணர்வு முகாமுக்கு சங்கரன்கோவில்- திருக்குறுங்குடி கோவில் யானைகள் புறப்பட்டு சென்றன


புத்துணர்வு முகாமுக்கு சங்கரன்கோவில்- திருக்குறுங்குடி கோவில் யானைகள் புறப்பட்டு சென்றன
x
தினத்தந்தி 13 Dec 2018 10:11 AM IST (Updated: 13 Dec 2018 10:11 AM IST)
t-max-icont-min-icon

புத்துணர்வு முகாமுக்கு சங்கரன்கோவில்-திருக்குறுங்குடி கோவில் யானைகள் புறப்பட்டுச் சென்றன.

நெல்லை, 

புத்துணர்வு முகாமுக்கு சங்கரன்கோவில்-திருக்குறுங்குடி கோவில் யானைகள் புறப்பட்டுச் சென்றன.

சங்கரன்கோவில்

தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் 48 நாட்கள் நடக்கிறது. இதற்காக சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் யானை கோமதி, நேற்று மாலை புத்துணர்வு முகாமுக்கு லாரியில் புறப்பட்டுச் சென்றன. முன்னதாக யானை கோமதிக்கு மாலை அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பழங்கள் கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ரதவீதிகள் வழியாக யானை கோமதி, கோவில் நந்தவனத்துக்கு சென்றது. செல்லும் வழியில் பக்தர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பழங்கள் கொடுத்து வழியனுப்பினர். பின்னர் லாரியில் யானை ஏற்றப்பட்டு ராஜபாளையம் வழியாக தேக்கம்பட்டிக்கு சென்றது. யானையுடன் கோவில் ஊழியர் பாலு மற்றும் யானை பாகனும் சென்றனர்.

திருக்குறுங்குடி

இதேபோல் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானை சுந்தரவள்ளி நேற்று மாலை லாரியில் புறப்பட்டுச் சென்றது.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஜீயர் மட நிர்வாகிகள், பக்தர்கள் யானையை வழியனுப்பி வைத்தனர். மற்றொரு யானையான குறுங்குடி வள்ளிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அந்த யானை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதேபோல் இலஞ்சி குமாரர் கோவில் யானை, நெல்லையப்பர் கோவில் யானையும் புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றன.

Next Story