அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை அமைச்சர் காமராஜ் பேட்டி
அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பயனாளிகளுக்கு தார்ப்பாய் மற்றும் 27 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை வழங்கிய அமைச்சர் காமராஜ் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.19 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்டுள்ள கூடுதல் தகவல் விரைவில் வழங்கப்படும். இதனை தொடர்ந்து உரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.
முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிப்பார்கள். பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என்ற நீதிபதிகளின் தீர்்ப்பை விமர்சிக்க முடியாது. இது தமிழக அரசுக்கு ஒருபோதும் பின்னடைவாக இருக்காது.
செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்வது குறித்து எங்களுக்கு கவலையில்லை. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Related Tags :
Next Story